Welcome our site!

Welcom our channel... செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள Haamid இனையத்தில் இனைந்திருங்கள் Haamid உங்களை அன்புடன் வரவேற்கிறது.!

Saturday, December 31, 2022

மரணம் ஓர் எச்சரிக்கை.!

மரணம் ஓர் எச்சரிக்கை.!
உலகில் பிறந்த ஒவ்­வொரு மனி­த­னுக்கும் மரணம் என்­பது நிச்­ச­ய­மா­னது. உல­கி­லுள்ள எந்த தரப்­பி­னரும் கருத்­து­வேற்­று­மைக்கு இட­மின்றி உறு­தி­யாக ஏற்­றுக்­கொண்ட ஒரு விடயம் மரணம் மட்­டுமே. உலகில் பிறந்த ஒவ்­வொ­ரு­வரும் அதனை சுவைத்தே தீர­வேண்டும் என்­ப­தனை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். ஆனால், அந்த மரணம் பற்­றிய யதார்த்­த­மான பார்­வையும் அதற்குப் பின்­னா­லுள்ள உண்­மை­யான வாழ்வு பற்­றி­யுமே மனி­தர்­களில் பல தரப்­பினர் அறி­யா­மையில் உள்­ளனர்.

மரணம் உறு­தி­யா­னது என்­ப­தனை பல குர்­ஆ­னிய வச­னங்­களும் நபி­மொ­ழி­களும் எமக்கு தெளி­வு­ப­டுத்­து­கின்­றன.

நீங்கள் எங்­கி­ருந்த போதிலும் உங்­களை மரணம் வந்­த­டையும், உறு­தி­யான கோட்­டை­களில் நீங்கள் இருந்­தாலும் சரியே! (குர்ஆன் 4: 78)

“ஒவ்வோர் ஆத்­மாவும் மர­ணத்தைச் சுவைத்­தே­யாக வேண்டும், அன்­றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்­கைக)ளுக்­கு­ரிய பிரதி பலன்கள் முழு­மை­யாகக் கொடுக்­கப்­படும், எனவே எவர் (நரக) நெருப்­பி­லி­ருந்து பாது­காக்­கப்­பட்டுச் சுவர்க்­கத்தில் பிர­வே­சிக்­கு­மாறு செய்­யப்­ப­டு­கி­றாரோ அவர் நிச்­ச­ய­மாக வெற்­றி­ய­டைந்­து­விட்டார். இவ்­வு­லக வாழ்க்கை மயக்­கத்தை அளிக்­க­வல்ல (அற்ப இன்பப்) பொரு­ளே­யன்றி வேறில்லை.”

(அல்­குர்ஆன்- 3:185)

உல­கி­லுள்ள எவ­ராலும் அறிந்­து­கொள்ள முடி­யாத ஐந்து விட­யங்­களில் மர­ணமும் ஒன்­றாகும். அந்த ஐந்து விட­யங்­களும் எப்­பொ­ழுது நிகழும் என்­ப­தனை அல்­லாஹ்வைத் தவிர வேறெ­வரும் அறிய மாட்­டார்கள். அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறும்­போது, “மறு­மைநாள் பற்­றிய அறிவு அல்­லாஹ்­வி­டமே உள்­ளது. அவன் மழையை இறக்­கு­கிறான். கரு­வ­றை­களில் உள்­ளதை அவன் அறி­கிறான். தான் நாளை சம்­பா­திக்­க­வுள்­ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மர­ணிப்போம் என்­ப­தையும் எந்த உயி­ரி­னமும் அறி­யாது. அல்லாஹ் நன்­க­றிந்­தவன்; நுட்­ப­மா­னவன்.”

(அல்­குர்ஆன்- 31 : 34)

மர­ணத்தைப் பற்றிப் பேசு­கின்ற இறைச் செய்­தி­களை அவ­தா­னிக்­கின்ற ஒருவர் மரணம் யாருக்கு, எப்­பொ­ழுது, எங்கு நிகழும் என்­ப­தனை அல்­லாஹ்­வை­யன்றி வேறு எவ­ராலும் அறிய முடி­யாது என்­ப­தனை மிக இல­கு­வாகப் புரிந்­து­கொள்வார். எந்­நே­ரமும் அதற்­கான தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும் என்­ப­துவே நாம் பணிக்­கப்­பட்ட ஒரே அம்­ச­மாகும்.

மர­ணத்தை எதிர்­கொள்ளும் வேளையில் மனி­தர்கள் இரு வகை­யி­ன­ராகப் பிரிக்­கப்­பட்டு உயிர் வாங்­கப்­ப­டு­கின்­றார்கள்.

1-. இறை­ம­றுப்­பா­ளர்கள், பாவி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் மர­ணத்தைக் கண்டு விரண்­டோடக் கூடி­ய­வர்­க­ளா­கவே இருப்­பார்கள், உண்­மை­யான, நிரந்­த­ர­மான மறுமை வாழ்­விற்குப் பக­ர­மாக உல­கத்தின் சுக­போக வாழ்க்­கை­யையே அவர்கள் தமக்­கென்று தேர்ந்­தெ­டுத்துக் கொண்­டனர். அவர்கள் தமது கரங்­களால் செய்­த­வற்றின் உண்­மை­யான பெறு­பே­று­களை மரண வேளை­யி­லி­ருந்தே உணர ஆரம்­பித்­து­வி­டு­வார்கள். அது­பற்றி அல்லாஹ் தனது திரு­ம­றையில் இவ்­வாறு குறிப்­பி­டு­கிறான்:

அவர்­களில் ஒரு­வ­னுக்கு மரணம் வரும்­போது, அவன்: ‘என் இறை­வனே! என்னைத் திரும்ப (உல­குக்குத்) திருப்பி அனுப்­பு­வா­யாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்­ததில் நல்ல காரி­யங்­களைச் செய்­வ­தற்­காக’ (என்றும் கூறுவான்). அவ்­வா­றில்லை! அவன் கூறு­வது வெறும் வார்த்­தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்­பப்­படும் நாள்­வ­ரையும் அவர்கள் முன்னே ஒரு திரை­யி­ருக்­கி­றது.” (அல்­குர்ஆன்- 23:99-100)

ஆனால், “அல்­லாஹ்வின் மீது பொய்க் கற்­பனை செய்­பவன், அல்­லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்­றுமே அறி­விக்­கப்­ப­டா­ம­லி­ருக்க, ‘எனக்கு வஹீ வந்­தது’ என்று கூறு­பவன்; அல்­லது ‘அல்லாஹ் இறக்­கி­வைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்­கி­வைப்பேன்’ என்று கூறு­பவன், ஆகிய இவர்­களை விடப் பெரிய அநி­யா­யக்­காரன் யார் இருக்க முடியும்? இந்த அநி­யா­யக்­கா­ரர்கள் மரண வேத­னையில் இருக்­கும்­போது நீங்கள் அவர்­களைப் பார்த்தால், மலக்­குகள் தம் கைகளை நீட்டி (இவர்­க­ளிடம்) ‘உங்­க­ளு­டைய உயிர்­களை வெளி­யேற்­றுங்கள்; இன்­றைய தினம் உங்­க­ளுக்கு இழி­வு­தரும் வேத­னையைக் கூலி­யாகக் கொடுக்­கப்­ப­டு­வீர்கள். ஏனெனில், நீங்கள் உண்­மை­யல்­லா­ததை அல்­லாஹ்வின் மீது கூறிக் கொண்­டி­ருந்­தீர்கள்; இன்னும், அவ­னு­டைய வச­னங்­களை (நம்­பாது நிரா­க­ரித்துப்) பெரு­மை­ய­டித்துக் கொண்­டி­ருந்­தீர்கள்’ (என்று கூறு­வதை நீர் காண்பீர்)” (அல் குர்ஆன் 6:93)

“அல்­லாஹ்வை மறுப்­போரின் முகங்­க­ளிலும், முது­கு­க­ளிலும் வான­வர்கள் அடித்து அவர்­களைக் கைப்­பற்றும் போது, சுட்­டெ­ரிக்கும் வேத­னையை அனு­ப­வி­யுங்கள்! என்று கூறு­வதை நீர் பார்க்க வேண்­டுமே! நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம், அல்லாஹ் அடி­யார்­க­ளுக்கு அநீதி இழைப்­பவன் அல்லன்.” (அல்­குர்ஆன்- 8: 50,51)

2- நல்­லோர்கள் மர­ணத்தை சந்­திக்கும் வேளையில் சுவ­னத்தைக் கொண்டு சுப­சோ­பனம் சொல்­லப்­பட்டு, அல்­லாஹ்வின் பிரத்­தி­யேக சுகந்­தங்­களைக் கொண்டு நன்­மா­ராயம் கூறப்­பட்ட நிலை­யிலே அவர்­களை நோக்­கி­வரும் வான­வர்­களை சந்­திப்­பார்கள். மர­ணித்தால் நான் சுவனம் சென்று விடுவேன் என்று வாழ்­கின்ற மனி­த­னுக்கு மரணம் ஒரு பெரிய சவா­லாக இருக்கப் போவ­தில்லை. மாற்­ற­மாக அவன் தனது ரப்பை சந்­திக்க எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்து, பெற்றுக் கொண்ட நல்ல சந்­தர்ப்­ப­மா­கவே அதனை கரு­துவான்.

நல்­லோ­ராக இருக்கும் நிலையில் அவர்­களின் உயிர்­களை வான­வர்கள் கைப்­பற்றி, “உங்கள் மீது ஸலாம் (சாந்­தியும் அமை­தியும்) உண்­டா­கட்டும்! நீங்கள் செய்­த­வற்றின் கார­ண­மாக சொர்க்­கத்தில் நுழை­யுங்கள்!” என்று கூறு­வார்கள் (அல்­குர்ஆன்- 16:32)

அல்லாஹ் கூறு­கின்றான்: “நிச்­ச­ய­மாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்­லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறு­தி­யாக நிலைத்து நின்­றார்­களோ, அவர்கள் பால் மலக்­குகள் வந்து, ‘நீங்கள் பயப்­ப­டா­தீர்கள்; கவ­லையும் கொள்ள வேண்டாம், உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கப்­பட்ட சுவர்க்­கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறி­ய­வாறு) இறங்­கு­வார்கள்.” (அல் குர்ஆன்- 41:30)

நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்:

அல்­லாஹ்வைச் சந்­திக்க யார் விரும்­பு­கி­றாரோ அவரை அல்­லாஹ்வும் சந்­திக்க விரும்­பு­கிறான். யார் அல்­லாஹ்வின் சந்­திப்பை வெறுக்­கி­றாரோ அவ­ரது சந்­திப்பை அல்­லாஹ்வும் வெறுக்­கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி­னார்கள். அப்­போது ஆயிஷா (ரழி) அவர்கள் அல்­லது நபி­க­ளாரின் வேறொரு மனைவி அல்­லாஹ்வின் தூதரே! நாங்கள் அனை­வரும் மர­ணத்தை வெறுக்­கத்­தானே செய்­கிறோம் என்று கேட்­டார்கள், அதற்­க­வர்கள் அவ்­வாறு அல்ல. ஒரு மூஃமி­னுக்கு இறை­வனின் அருள் அவ­னது சுவர்க்கம் அவ­னது திருப்தி பற்றி நற்­செய்தி கூறப்­பட்டால் அல்­லாஹ்வின் சந்­திப்பை விரும்­பு­கிறான். அல்­லாஹ்வும் அவனைச் சந்­திக்க விரும்­பு­கிறான். ஒரு காஃபிர் அல்­லாஹ்வின் வேதனை, அவ­னது கோபம் பற்றி எச்­ச­ரிக்­கப்­பட்டால் அவன் அல்­லாஹ்வின் சந்­திப்பை வெறுக்­கிறான். அல்­லாஹ்வும் அவ­னது சந்­திப்பை வெறுக்­கிறான் என்று விளக்­க­ம­ளித்­தார்கள். அறி­விப்­பவர் ; உபாதா இப்னு ஸாமித் (ரழி)

நூல் – புஹாரி , 6026

ஓர் இறை விசு­வா­சியின் அக­ரா­தியில் உலக வாழ்க்கை என்­பது உல­கத்­தி­லி­ருந்து கொண்டே மறு­மைக்­காக வாழ்­வ­த­னையே குறிக்­கி­றது. அதற்­காக வாழ்­கின்ற ஓர் இறை விசு­வாசி தான் எதிர் பார்த்துக் காத்­தி­ருந்த, சுவன வாழ்க்­கை­யையும் மறு­மையில் அவ­னுக்கு வாக்­க­ளிக்­கப்­பட்ட அந்த இன்­பங்­க­ளையும் காண எவ்­வ­ளவு? பேரா­வ­லுடன் காத்­தி­ருப்பான், அந்த மறுமைப் பய­ணத்தின் நுழை­வா­யி­லான மர­ணத்தை எவ்­வ­ளவு? மகிழ்ச்­சி­யுடன் ஏற்­றுக்­கொள்வான்.

மரணம் சுவை­யா­னதா? அல்­லது சுமை­யா­னதா? என்­பதைத் தீர்­ம­னிப்­ப­தற்கே உலக வாழ்க்கை வழங்­கப்­பட்­டுள்­ளது, நல்ல மரணம் நிகழ்­ப­வ­ருக்கு அதன் பின்­னா­லுள்ள அனைத்தும் நல்­ல­தாக மாத்­தி­ரமே அமைந்து விடு­கி­றது, மோச­மான மரணம் நிகழ்­ப­வ­ருக்கு அதன் பின்­னா­லுள்ள அனைத்தும் மிக மோச­மா­ன­தாக மாத்­தி­ரமே அமைந்து விடு­கி­றது.

இஸ்லாம் மர­ணத்தை ஒரு மனி­தனின் உலக வாழ்­விற்கும் அவ­னது சுவர்க்க, நரக வாழ்­விற்கும் இடை­யி­லான ஒரு பிரி­கோ­டா­கவே நோக்குகிறது, இறைவனை மறுத்துவன், அவனுக்கு மாறுசெய்தவன் மரணிக்கின்றான் என்றால் அவன் அவனது சுகபோக வாழ்க்கையிலிருந்து, இறை நிராகரிப்பாளர்கள் பாவிகளுக்கு இறைவன் சித்தப்படுத்தி வைத்துள்ள தங்குமிடத்தை நோக்கிப் புறப்படுகிறான் என்றே பொருளாகும், உண்மையான இறைவிசுவாசி மரணிக்கின்றான் என்றால் அவன் உலகமென்ற சிறைச்சாலையிலிருந்து விடுபட்டு அவன் உண்மையாக வாழ வேண்டிய அவனது சுவனத்தை நோக்கிப் புறப்படுகிறான் என்றே பொருளாகும், இந்த நம்பிக்கை எமது உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடுமானால் நாம் மரணத்தைக் கண்டு ஒரு போதும் அஞ்சவோ நடுங்கவோ பயப்படவோ மாட்டோம், பிறரது மரண செய்தியைக் கேட்டதும் நொந்து, உடைந்து கலங்கிப் போகவும் மாட்டோம் என்பது தெளிவான உண்மையாகும்.

- ஹாமித் பின் முஹம்மது ரஹீம்

Thursday, December 29, 2022

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்




மார்க்க விடயங்களில் மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொரு கொள்கைவாதிகளும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு சம்பவம் தான் இந்தத்திருமணம் ஆகும். மார்க்க சட்டதிட்டங்களை பேசுவார்கள் பேணுவார்கள்.ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் மௌனியாவார்கள்.ஒரு சுன்னத்தைப் பேணுவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் காணலாம்.


நிக்காஹ்வை பள்ளிவாசல்களில் மிகவும் எளிமையான முறையில் நடாத்தி ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பதுவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அநியாயமுமாகும்.

திருமணத்தில் நடக்கின்ற ஆடம்பரங்கள்

• ஹோட்டல் (Hotel) அல்லது மண்டபத்துக்கான செலவுகள்

• மணமக்களின் ஆடை அலங்காரத்துக்கான செலவுகள்

• மணமக்கள் அமரும் மேடை அலங்காரம்

• வீடியோ போட்டோவுக்கான செலவுகள்

• அழைப்பிதலுக்கான செலவுகள்

• பெண் வீட்டாரிடம் சுமத்துகின்ற செலவுகள்

• இன்னும் பல அநாச்சார, அந்நிய கலாச்சார செலவுகள்

• இறுதியில் விரயமாகின்ற குப்பையில் தஞ்சமாகின்ற சாப்பாடு

இவையனைத்திற்கும் பல லட்ச ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோசனமும் நன்மையும் கிடையாது.மாறாக இத்தகைய திருமணத்தின் மூலம் கடன்காரன் என்ற அந்தஸ்து மட்டுமே எஞ்சுகிறது.இந்த ஆடம்பரங்களும் அநாச்சாரங்களும் நாமே நம் மீது திணித்துக் கொண்டவை.இந்தப்பல லட்ச ரூபாய்களைக் கொண்டு எத்தனையோ வாழ வழியற்ற குடும்பங்களை வாழ வைக்க முடியும் என்பதை எவரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? இதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளலாம்.ஏழை எளியவர்களும் நமக்கு துஆ செய்வார்கள்.பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும் சற்று கவனித்துப் பாருங்கள்.

வீண்விரையம் செய்யாதீர்கள்! வீண்விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன் 7:31)

உறவினருக்கும்ஏழைக்கும்நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண்விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 17:26,27)

மணமகனுக்கு இவ்வநியாயத்தை எதிர்த்து போராட முடியாதா?

பெற்றோரையும் உற்றாரையும் எதிர்த்து நின்று தான் விரும்பும் பெண்ணை மணமுடிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அதனை சாதித்துக் கொள்வதைப் போல் இந்த அநியாயத்தையும், ஆடம்பரத்தையும், அக்கிரமத்தையும் எதிர்க்க, போராட ஏன் அவர்களுக்கு தைரியமில்லை? மணமகன் மட்டும் ஒற்றைக்காலில் நின்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து இவ்வநியாயத்தை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் பல லட்ச ரூபாய்கள் வீணாவதிலிருந்தும், கொடிய நரகிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

திருமண விருந்து எப்படி அமைய வேண்டும்?

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் திருமணங்களையும் அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்த திருமணங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.ஸஹாபாக்களின் திருமணத்தின் போது அவர்கள் நபியைக் கூட அழைக்கவில்லை என்பதை பின்வரும் சம்பவம் மூலம் அறியலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தம் மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளம் இருக்கஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.அப்போது (அது குறித்து) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வினவிய போது தாம் ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டதாக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் தெரிவித்தார்கள்.நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மஹர் (விவாகக் கொடை) செலுத்தினீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கத்தை” என்று பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா மணவிருந்து அளிப்பீராக!” என்று கூறினார்கள்.

நூல்: ஸஹீஹுல் புகாரி 5153

செல்வந்தராக இருந்த நபித்தோழருக்கே அல்லாஹ்வின் தூதர் ஒரு ஆட்டை அறுத்து வலீமா கொடுக்க சொல்லியிருக்கும் போது நாம் ஏன் நம்மை வருத்திக் கொண்டு விரலுக்கு மிஞ்சிய வீக்கமாக வீண் விரையம் செய்ய வேண்டும்?

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த ‘சுன்னத்’ நிறைவேறிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவுசிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா‘ விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி­) நூல்: புகாரி 371, 2893

அறிவிப்பவர்: அலீ (ர­லி), நூல்: நஸயீ – 5256

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழியைப் பின்பற்றி நபித்தோழர்களும் இந்த விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொண்டுள்ளனர்.

அபூமஸ்வூத்(ரலி­) அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா?” எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டுஉடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள்.

நூல்: பைஹகீ பாகம்:7,பக்கம் :268

அறிவிப்பவர்: அலீ (ர­லி), நூல்: நஸயீ – 5256

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வழியைப் பின்பற்றி நபித்தோழர்களும் இந்த விஷயத்தில் கடுமையான போக்கை மேற்கொண்டுள்ளனர்.

அபூமஸ்வூத்(ரலி­) அவர்களை ஒருவர் விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்கள் வீட்டில் உருவச் சிலைகள் உள்ளனவா?” எனக் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அப்படியானால் அதை உடைத்து எறியும் வரை வர மாட்டேன் என்று கூறி விட்டுஉடைத்து எறிந்த பின்னர் தான் சென்றார்கள்.

நூல்: பைஹகீ பாகம்:7,பக்கம் :268

என் தந்தை காலத்தில் ஓர் விருந்துக்கு ஏற்பாடு செய்தோம். என் தந்தை மக்களை அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் அபூ அய்யூப் (ரலி­) அவர்களும் இருந்தார்கள். வீட்டிற்கு வந்த போது பட்டுத் துணியால் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டதைக் கண்டார்கள். என்னைக் கண்டதும் அப்துல்லாஹ்வே! நீங்கள் சுவர்களுக்கு பட்டால் அலங்காரம் செய்கிறீர்களா?” எனக் கேட்டார்கள். பெண்கள் எங்களை மிகைத்து விட்டனர்” என்று என் தந்தை கூறினார். அதற்கு அபூ அய்யூப் (ர­) அவர்கள் உம்மை பெண்கள் மிஞ்சி விடுவார்கள் என்று நான் அஞ்சவில்லை” என்றார்கள். மேலும் உங்கள் உணவைச் சாப்பிடவும் மாட்டேன். உங்கள் வீட்டிற்குள் வரவும் மாட்டேன்” என்று கூறிவிட்டுதிரும்பிச் சென்றார்கள்.

தப்ரானியின் கபீர் பாகம்:4, பக்கம்:118

மிகச் சாதாரணமாக நாம் கருதுகின்ற இந்தக் காரணத்திற்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் விருந்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதை விட பல நூறு மடங்கு ஆடம்பரங்களும், அனாச்சாரங்களும், வீண் விரயங்களும் ம­லிந்து காணப்படும் விருந்துகளில் எவ்வித உறுத்தலும் இல்லாமல் நாம் கலந்து கொள்கிறோம். இது சரி தானா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள். நூல்: அஹ்மத் – 23388

எனவே மிக மிக குறைந்த செலவில் நபி வழியில் நம் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளின் முலம் அறிந்து கொள்ளலாம்.ஒரு ஊரில் குறைந்தது பத்துப்பேராவது திருமணங்களை மிக மிக எளிமையாக குறைந்த செலவுடன் கூடியது பத்துப்பேரைக் கொண்டாவது நடாத்தினால் அடுத்தவர்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் முன் மாதிரியாக இருக்குமல்லவா?

விருந்தில் மார்க்கத்துக்கு முரணாண காரியங்கள் இடம்பெறல்.

நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தேன்.அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படத்தைக் கண்ட போது திரும்பிச் சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலி (ரலி) அவர்கள்.நூல்: நஸயீ – 5256

தன் சொந்த மகளின் வீட்டிலேயே மார்க்கத்திக்கு முரணான ஒரு காரியத்தைக் கண்டு அந்த விருந்தை ஏற்காமல் நபியவர்கள் சென்று விட்டார்கள் என்றால், இன்று நடக்கின்ற திருமண விருந்தில் எத்தனை தீமையான காரியங்கள் நடக்கின்றன? இத்தகைய விருந்துக்கு சமூகமளிப்பதை நாம் புறக்கணிக்கின்றோமா?

அல்லாஹ்வுக்காக இத்தகைய விருந்துக்கு சமூகமளிப்பதை நாம் புறக்கணித்தால் அது ஒரு போதும் பாவமாகாது.ஊருலகத்தின் திருப்தியை நாம் விரும்பினால் அது ஒரு போதும் முடியாது.அதனால் எந்தவித நன்மையும் இல்லை. ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தமே மிக மிக மேலானது.எனவே அல்லாஹ்வின் திருப்தியையும் அருளையும் பெற இவ்வநாச்சாரங்களையும், ஆடம்பரங்களையும் விட்டொழித்து எளிமையான முறையில் நபி வழியில் திருமணங்களை நடாத்தவும் ஆடம்பரமான விருந்து வைபவங்களுக்கு சமூகமளிப்பதை புறக்ககணிக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாதமகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

(அல்குர்ஆன்31:33)

✍️ஹாமித் பின் முஹம்மது ரஹீம் 





எங்க வீட்டு திராட்சை தோட்டம்.!






Irfan views troll

 #irfanviews #irfansviews #irfan